Sunday 26 June 2016

 பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் விடுக்கும் அவசர செய்தி !

இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது.
பேஸ்புக்,  போட்டோக்களாலே அதிக வாசகர்களை இணைத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பானது அதனை ஏன் பேக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் உள்பட பலரும் நினைக்கலாம். இந்த புதிய அறிவிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, பேஸ்புக் பயன்படுத்தும் 1.65 மில்லியன் மக்களுக்கும் இது பொருந்தும்.
ஒரு நாளைக்கு பேஸ்புக்கில் லட்சக்கணக்கான போட்டோக்கள் அப்லோடு செய்யப்படுகின்றன.
பேஸ்புக் மொபைல் ஆப்பில் பல்வேறு மாற்றங்கள் குறித்து உங்களுக்கு நோட்டிபிகேசன் வந்திருக்கும்.
எனவே அதன்படி அவர்கள் உங்கள் போட்டாக்களை அழிக்கவுள்ளனர், இதற்கான மாற்றம் உங்கள் மொபைலில் இருந்து துவங்குகிறது.
பேஸ்புக் நிறுவனம் Synced போட்டாக்கள்( Synced Photos) மற்றும் வீடியோக்களை பாதுகாக்க வேண்டுமெனில் புதிதாக Moments என்ற அப்பை டவுன்லோட் செய்து ஜூலை 7ம் தேதிக்கு முன்னதாக log in செய்ய வலியுறுத்தியுள்ளது. இந்த Moments அப் வேண்டாம் என்றால், உங்கள் கணிணியில் போட்டாக்களை டவுன்லோடு செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது. இல்லாவிட்டால் போட்டாக்கள் மற்றும் வீடியோக்கள் அழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளது. Moments அப் மூலம் விரும்பியவர்களுக்கு மட்டும் தனியாக அனுப்பிக்கொள்ளும் வசதியை கொண்டுள்ளது.
sync செய்யப்பட்ட குரூப் போட்டாக்களை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் அனுப்பலாம். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு அனுப்பும் போட்டாக்களை நீங்கள் மட்டுமே காண முடியும். Moments வைத்துள்ளவர்கள் மட்டுமே உங்கள் போட்டாக்களை காண முடியும். இது போன்ற வசதிகள் பேஸ்புக்கின் புதிய Moments அப்பில் உள்ளது.
இச்செய்தியினை அனைவரின் பயன்கருதி பகிரவும்

Saturday 25 June 2016


ரமலான் நோன்பு பற்றிய வார்த்தைகள்

ஸஹர் உணவில் மிக அதிகமான நன்மைகள் இருப்பதால் நபி (ஸல்)அவர்கள் அதனை வலியுறுத்தி "ஸஹர் செய்யுங்கள் நிச்சயமாக ஸஹர் உணவில் பரக்கத் இருக்கிறது என்று கூறினார்கள்.
(ஸஹீஹூல் புகாரி ஸஹீஹ் முஸ்லிம்
Add caption





காரணம் என்னவெனில்ஸஹர் நேரத்தில் விழித்தெழுவது இரவில் நின்று வணங்க வாய்ப்பபை ஏற்படுத்தும் ஃபஜ்ர் தொழுகையை ஜமா அத்துடன் நிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் பள்ளியை நோக்கி நடக்கச் செய்வதுடன் நோன்பை நோற்க்க உடல்வலிமையையுமம் தருகிறது இதனை நபி (ஸல்)அவர்கள் தானும் செய்து தனது தோழர்களுக்கும் பயிற்சியளித்தார்கள்

ஜைது இப்னு ஸாபித் (ர‌‍‌‍ழிஅவர்கள் "நாங்கள் நபி (ஸல்அவர்களுடன் ஸஹர் உணவை உண்டோம் பிறகு தொழுகைக்குச் சென்றோம்என்று கூறினார்கள்ஒருவர் "அந்த இரண்டுக்கும் மத்தியில் எவ்வளவு நேரம் (இடைவெளிஇருந்தது?" என்று கேட்டார் . "50ஆயத்துகள் (ஓதும் நேரம்)" ன ஜைது (ரழிிபதிலளித்தார்கள்
(ஸஹீஹூல் புகாரி ஸஹீஹ் முஸ்லிம்)

நோன்பின் போது உம்மை யாரேனும் திட்டினால் அல்லது உம்மிடம் முறையற்று நடந்து கொண்டால், நிச்சயமாக நான் நோன்பாளி! நிச்சயமான நான் நோன்பாளி! என்று கூறி (ஒதுங்கி) விடும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : இப்னு குசைமா

எத்தனையோ நோன்பாளிகளுக்கு (அவர்கள் உணர்ந்த) பசியையும் தாகத்தையும தவிர வேறு எந்த கூலியும் நோன்பிற்காகக் கிடைக்காது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அஹ்மத்

அல்லாஹ் கூறுகிறார் :

ஈமான் கொண்டாரோ! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் பயபக்தியுடையவராகலாம்.
அல்குர்ஆன் : 2:183

எனவே உங்களில் எவர் அம்மாதத்தை - ரமலானை -பெறுகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்று விடவும். எவரேனும் நோயாளியாகவோ, பிரயாணத்திலோ இருந்தால் மற்ற நாட்களில் ( ஏற்கனவே விடுபட்ட நோன்பினை கணக்கிட்டு நோன்பு நோற்றுவிடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். மேலும் அவன் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை.
அல்குர்ஆன் : 2:185

Wednesday 26 March 2014

சமூக ஆர்வலர் மான் சேக் ஏற்பாடு செய்த சிறப்பு கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் அஸ்லம் வாக்கு சேகரிப்பு ! சமூக ஆர்வலர் மான் சேக் அவர்களின் இல்லத்தில் நேற்று மாலை 5 மணியளவில் ஏற்பாடு செய்த சிறப்பு கூட்டத்தில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தஞ்சை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர் பாலுவிற்கு வாக்கு சேகரித்தார். இந்த கூட்டம் கீழத்தெரு சங்க தலைவர் தாஜுதீன், செயலாளர் சேக்தாவூது, பொருளாளர் N.M.S. மன்சூர் மற்றும் ஏனைய நிர்வாகிகள் மான் நெய்னா முஹம்மது, நாட்டமை சேக்தாவூது, சுலைமான் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் வறண்டு காணப்படும் அதிரையின் அனைத்து குளங்களுக்கும் நீர் ஆதாரத்தை கொண்டுவருவது தொடர்பான கோரிக்கையை மான் சேக் முன்வைத்தார். இன்றைய கூட்டத்தில் திமுக ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், 16 வது வார்டு உறுப்பினர் முஹம்மது யூசுப், திமுக 15 வது வார்டு பொருளாளர் சேக்தாவூது, திமுக 16 வது வார்டு செயலாளர் யூசுப் மற்றும் ஏராளமான மஹல்லாவாசிகள் கலந்துகொண்டார்கள். கீழத்தெரு பகுதி இளைஞர்கள் பலர் திரளாக பங்கேற்று கருத்துரைகளை வழங்கினார்கள். முன்னதாக வந்திருந்த அனைவரையும் கீழத்தெரு சங்க பொருளாளர் N.M.S. மன்சூர், மான் சேக் ஆகியோர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர். Man shaik

Monday 9 December 2013

பிலால் நகரில் சூழ்ந்துள்ள வெள்ளத்தை அப்புறப்படுத்த உதவிய த.மு.மு.க வினர் ! அதிரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர் மழை பெய்து வந்தது. இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டிருந்தன. பாதிப்படைந்த பகுதிகளில் பிலால் நகரும் ஒன்று [ இதை செய்தியாக அதிரை நியூஸிலும் வெளியிட்டிருந்தோம் ] இதை அறிந்த இந்தப்பகுதியின் த.மு.மு.க கிளையினர் ஊராட்சிமன்ற ஊழியர்களின் உதவியுடன் சூழ்ந்துள்ள வெள்ளத்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தேங்கி காணப்பட்ட மழைநீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டன. இந்த பணியின் போது ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன், வார்டு உறுப்பினர் சித்திக், த.மு.மு.க அதிரை நகர தலைவர் சாதிக்பாட்சா, பிலால் நகர் கிளை நிர்வாகி நியாஸ் மற்றும் இதர நிர்வாகிகள் உடனிருந்தனர். அப்போது பிலால் நகர் கிளையின் சார்பாக பிலால் நகர் பிரதான பாலத்தின் இருபக்கமும் தடுப்பு சுவர் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஊராட்சி மன்ற தலைவரிடம் அளித்தனர்.