Monday, 9 December 2013
பிலால் நகரில் சூழ்ந்துள்ள வெள்ளத்தை அப்புறப்படுத்த உதவிய த.மு.மு.க வினர் ! அதிரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர் மழை பெய்து வந்தது. இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டிருந்தன. பாதிப்படைந்த பகுதிகளில் பிலால் நகரும் ஒன்று [ இதை செய்தியாக அதிரை நியூஸிலும் வெளியிட்டிருந்தோம் ] இதை அறிந்த இந்தப்பகுதியின் த.மு.மு.க கிளையினர் ஊராட்சிமன்ற ஊழியர்களின் உதவியுடன் சூழ்ந்துள்ள வெள்ளத்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தேங்கி காணப்பட்ட மழைநீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டன. இந்த பணியின் போது ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன், வார்டு உறுப்பினர் சித்திக், த.மு.மு.க அதிரை நகர தலைவர் சாதிக்பாட்சா, பிலால் நகர் கிளை நிர்வாகி நியாஸ் மற்றும் இதர நிர்வாகிகள் உடனிருந்தனர். அப்போது பிலால் நகர் கிளையின் சார்பாக பிலால் நகர் பிரதான பாலத்தின் இருபக்கமும் தடுப்பு சுவர் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஊராட்சி மன்ற தலைவரிடம் அளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment