Wednesday, 26 March 2014

சமூக ஆர்வலர் மான் சேக் ஏற்பாடு செய்த சிறப்பு கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் அஸ்லம் வாக்கு சேகரிப்பு ! சமூக ஆர்வலர் மான் சேக் அவர்களின் இல்லத்தில் நேற்று மாலை 5 மணியளவில் ஏற்பாடு செய்த சிறப்பு கூட்டத்தில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தஞ்சை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர் பாலுவிற்கு வாக்கு சேகரித்தார். இந்த கூட்டம் கீழத்தெரு சங்க தலைவர் தாஜுதீன், செயலாளர் சேக்தாவூது, பொருளாளர் N.M.S. மன்சூர் மற்றும் ஏனைய நிர்வாகிகள் மான் நெய்னா முஹம்மது, நாட்டமை சேக்தாவூது, சுலைமான் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் வறண்டு காணப்படும் அதிரையின் அனைத்து குளங்களுக்கும் நீர் ஆதாரத்தை கொண்டுவருவது தொடர்பான கோரிக்கையை மான் சேக் முன்வைத்தார். இன்றைய கூட்டத்தில் திமுக ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், 16 வது வார்டு உறுப்பினர் முஹம்மது யூசுப், திமுக 15 வது வார்டு பொருளாளர் சேக்தாவூது, திமுக 16 வது வார்டு செயலாளர் யூசுப் மற்றும் ஏராளமான மஹல்லாவாசிகள் கலந்துகொண்டார்கள். கீழத்தெரு பகுதி இளைஞர்கள் பலர் திரளாக பங்கேற்று கருத்துரைகளை வழங்கினார்கள். முன்னதாக வந்திருந்த அனைவரையும் கீழத்தெரு சங்க பொருளாளர் N.M.S. மன்சூர், மான் சேக் ஆகியோர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர். Man shaik

No comments:

Post a Comment